வவுணதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டு விழா

0
244

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு சனிக்கிழமை (02.06.2018), நாவற்காடு பாரத் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமைவாக நடைபெற்ற இப்போட்டியில் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என நான்கு இல்லங்கள் நான்கு அணிகளாக பங்குகொண்டன.

ஆண், பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டம், கயிறு இழுத்தல், கால்பந்தாட்டம், எல்லே, கிரிக்கட் உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் நடைபெற்றன.

நடைபெற்ற கிரிக்கட் மென்பந்து சுற்றுப் போட்டியில் முதலாம் இடத்தினை பச்சை அணியினரும், இரண்டாம் இடத்தினை நீலம் அணியினரும், மூன்றாம் இடத்தினை மஞ்சள் அணியினரும் பெற்றுக்கொண்டனர்.

மற்றும் கால்பந்தாட்டப் போட்டியில், நீலம் அணியினர் 1ஆம் இடத்தினையும், மஞ்சள், சிவப்பு அணிகள் 2ஆம், 3ஆம் இடங்களையும் பெற்றுக்கொண்டனர்.

எல்லே போட்டியில் 1ஆம் இடத்தினை மஞ்சள் அணியும், 2ஆம் இடத்தினை சிவப்பு அணியும், 3ஆம் இடத்தினை நீலம் அணியினரும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நான்கு அணிகளுக்குமிடையிலான இடம்பெற்ற போட்டியில் கூடிய புள்ளிகளைப் பெற்று மஞ்சள் அணி முதலாம் இடத்தினையும், 2ஆம் இடத்தினை நீலம் அணியும், 3ஆம் இடத்தினை பச்சை அணியும் பெற்றுக்கொண்டன.

வெற்றி பெற்ற அணிகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், உதவிப் பிரதேச செயலாளர் சுபா சதாகரன், கணக்காளர் வீ. வேல்ராஜசேகரம், உதவித் திட்டப் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ், நிருவாக உத்தியோகத்தர் கே. கோமளேஸ்வரன் போன்றோர் வெற்றிக் கிண்ணங்களையும் பசுசுகளையும் வழங்கிவைத்தனர்.

DS - 2nd - cricket DS - 3 rd DS - spots (1)

LEAVE A REPLY