தி/ரொட்டவெவ முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்திக்கவும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை

0
265

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட ரொட்டவெவ முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் மொறவெவ பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைசர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இப்பாடசாலையில் 280 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் 22 ஆசிரியர்கள் வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் 13 ஆசிரியர்களே கடமையில் உள்ளதாகவும் பற்றாக்குறையாக உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை புதிய நியமனத்திலாவது வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயம் தரம் 01 சீ தரப்பாடசாலையாக இருந்த போதிலும் பொது நூலகம், விஞ்ஞான ஆய்வு கூடம் இல்லையெனவும் தூர இடங்களிலிருந்து வருகை தரும் ஆசிரியர்கள் வாடகை வீடுகளில் தங்கி வருவதாகவும் ஆசிரியர்களின் நலன் கருதியும் மாணவர்களின் நலன் கருதியும் கூடிய விரைவில் ஆசிரியர் விடுதியொன்றினையும் நிர்மாணிப்பதற்குறிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரியுள்ளார்.

அத்துடன் இப்பாடசாலையின் குறைபாடுகள் குறித்து பல தடவை அரசியல் வாதிகளிடமும், கல்வி திணைக்கள உயரதிகாரிகளிடமும் தெரியப்படுத்தியும் இதுவரை காலமும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY