புதுத் தெளபா

0
400

(Mohamed Nizous)

இரவில் செய்த பாவம்
இன்பொக்ஸ் சற்றில் செய்த பாவம்
பகலில் செய்த பாவம்
பாஸ்வேர்ட் திருடிய பாவம்
முன் செய்த பாவம்
முக நூலில் மோசமாய் போட்ட பாவம்
பின் செய்த பாவம்
பின் பின்னூட்டத்தில் பிதற்றிய பாவம்
ரகசியமாய்ச் செய்த பாவம்
ரவுட்டரை ஹெக் செய்த பாவம்
பரகசியமாய் செய்த பாவம்
பப்லிக் குரூப்பில் ஏசிய பாவம்
அறிந்து செய்த பாவம்
அண்ட்றொய்டில் செய்த பாவம்
அறியாமல் செய்த பாவம்
ஐ போணில் செய்த பாவம்
சிறிய பாவம்
சிம்மை மாற்றி செய்த பாவம்
பெரிய பாவம்
பேக் ஐடி திறந்து செய்த பாவம்
புதிய பாவம்
போண் பார்த்த பாவம்
பழைய பாவம்
படம் பார்த்த பாவம்
சொல்லால் செய்த பாவம்
சொந்தக் குரலை மாற்றி போட்ட பாவம்
செயலால் செய்த பாவம்
ஷெயார் செய்து செய்த பாவம்
ஊசாட்டத்தால் செய்த பாவம்
ஊர் பலாய் போஸ்ட் ரசித்த பாவம்
அடங்கலை விட்டும்…

LEAVE A REPLY