காத்தான்குடியில் இம்முறை நோன்புப் பெருநாள் பசார் வழமை போன்று ஆண்களுக்கு மாத்திரமே: நகர சபை

0
363

(விஷேட நிருபர்)

காத்தான்குடியில் இம்முறை நோன்புப் பெருநாள் பசார் வழமை போன்று ஆண்களுக்கு மாத்திரமே நடாத்துவது என இன்று (04) நடைபெற்ற காத்தான்குடி நகர சபையின் விஷேட அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த விஷேட அமர்வில் காத்தான்குடியில் நடாத்தப்படவுள்ள நோன்புப் பெருநாள் பசார் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் இச் சபையிலுள்ள பெண் உறுப்பினரான சல்மா ஹம்சாவினால் பெண்களுக்கும் தனியாக இரண்டு நாட்கள் நடாத்த வேண்டுமென ஆலோசனையை முன் வைத்திருந்தார்.

பெருநாள் காலங்களில் நாங்கள் பெண்களுக்கென தனியாக இரண்டு நாட்களை ஒதுக்கி பெருநாள் பசாரை தனியாக அவர்களுக்கு நடாத்தினால் அவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம் என அவர் கேட்டிருந்தார் எனினும் இன்றைய சபை அமர்வுக்கு வருகை தரவில்லை.

எனினும் பல் வேறு முறன்பாடுகள் அதில் காணப்படுவதாலும் நமதூர் தனித்துவமான ஊர் என்பதாலும் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று நாம் எதையும் செய்ய வேண்டும் என்பதாலும் இம் முறை வழமை போன்று ஆண்களுக்கு மாத்திரம் பெருநாள் பசாரை நடாத்துவோம் என தெரிவித்தார்.

இதனை சபை ஏக மனதாக ஏற்றுக் கொண்டதுடன் எதிர் வரும் நோன்புப் பெருநாள் பசாரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கும் ஆண்களுக்கு மாத்திரமே நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இஸ்லாமிய ஷரீஆவுக்குள் நின்று இஸ்லாமிய வரையறைகளை பேணி காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் ஆலோசனைகளைப் பெற்று காத்தான்குடி ஆற்றங்கரைப் பகுதியில் பெண்களுக்கான தனியான பெருநாள் பசார் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் எதிர் காலத்தில் ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. அது தொடர்பான கலந்துரையாடல்களை; நாம் நடாத்த வேண்டும் என நகர சபை தவிசாளர் அஸ்பர் மற்றும் நகர சபை உறுப்பினா யு.எல்.எம்.முபீன்; ஆகியோரும் கருத்;துக்களை தெரிவித்தனர்.

LEAVE A REPLY