நிந்தவூர் PRF சமூக சேவை அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வும் பொதுக்கூட்டமும்

0
404

சமூக சேவை என்பது ஒரு பரம்பரைச் சொத்தல்ல, சமூக சேவை செய்வதற்கு பணபலமோ படைபலமோ தேவையில்லை நல்ல உள்ளங்களின் சங்கமமே போதுமானது என்ற தொனிப் பொருளின் கீழ் இயங்கிவரும் PRF சமூக சேவை அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வு இறைவனின் உதவியுடன் Lucky HR Solutions (Pvt) Ltdஇன் உரிமையாளர் AM Nusky அவர்களின் நிதிப் பங்களிப்புடன் (sponsor) 02.06.2018 அன்று நிந்தவூர் கடற்கரை பூங்காவிற்கு அருகாமையில் உள்ள Risala Auditorium யில் இனிதே நடைபெற்றது.

இப்தார் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மௌலவி A. Aashiq ali அவர்களினால் இளைஞர்களும் சமூகப் பொருப்புக்களும் எனும் தொனிப் பொருளின் கீழ் பயான் நிகழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து தலைவர் H Amjath Ali அவர்களினால் தலைமையுறையும் செயலாளர் T Mohamed Insaf அவர்களினால் PRF சமூக சேவை அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாக சுருக்கமாக விளக்கப்பட்டது. அதனை தொடர்ந்து PRF சமூக சேவை அமைப்பின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளர் S Mohamed Saheeth அவர்களினால் நன்றியுரை வழங்கப்பட்டதனை தொடர்ந்து இப்தாருடன் ஆரம்ப நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

நிகழ்வின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இரண்டாவது நிகழ்வாக மஃரிப் தொழுகையினை தொடர்ந்து PRF சமூக சேவை அமைப்பின் அங்கத்தவர்களுக்கிடையில் PRF சமூக சேவை அமைப்பின் கடந்த கால செயற்பாடுகளின் சாதக மற்றும் பாதக விளைவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்பதோடு எதிர்கால திட்டமிடல் தொடர்பாகவும் கலந்தாலோசனை செய்யப்பட்டது.

PRF சமூக சேவை அமைப்பின் அங்கத்தவர்களினால் அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறு வகையான விளைதிறன் மிக்க செயற்றிட்டங்கள் முன்மொழியப்பட்டு அவை தொடர்பாகவும் கலந்தாலோசனை செய்யப்பட்டது. இதில் SM. முஜாஹித் (Welfare Team) அவர்களினால் முன்மொழியப்பட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் தொற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் தலைவர் H Amjath Ali அவர்களினால் முன்மொழியப்பட்ட வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தொடர்பான செயற்றிட்டங்களை விரைந்து செயற்படுத்தவும் கலந்தாலோசனை செய்யப்பட்டது.

இறுதி நிகழ்வாக PRF சமூக சேவை அமைப்பினால் நாடலாவிய ரீதியில் நடாத்தப்படும் மாபெரும் வினா விடை போட்டி தொடர்பாக, வெற்றியாளர்களை தெரிவு செய்கின்ற முறைமை மற்றும் அதன் வெளிப்படுத்தல்கள் தொடர்பாகவும் பரிசில்கள் தொடர்பாகவும் கலந்தாலோசனை செய்யப்பட்டது.

நிகழ்வுகளின் திட்டமிடல் கட்டத்தில் இருந்து வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு தங்களாலான அனைத்து உதவிகளையும் வழங்கிய MSMR Rusni(Welfare leader), TM Insaaf(Secretary), H Amjath Ali(President), IM Nifras(Treasurer), AAM Naashif(Vice Treasurer), JM Infas(Assistant Secretary), LM Mursith(Welfare team), ARM Rumaiz(Advisor – Education), MIM Irshath (Vice President) மற்றும் SM Saheeth (World Wide Coordinator) ஆகியோருக்கு PRF சமூக சேவை அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Sameen Mohamed Saheeth
(ஊடக பிரிவு – PRF சமூக சேவை அமைப்பு, நிந்தவூர்)

IMG_2018-06-02_21-59-37 20180603_045512

LEAVE A REPLY