புதிய காத்தான்குடி ஜும்ஆப்பள்ளிவாயல்களுக்கும் சம்மேளன தலைமைப்பதவி: சம்மேளன முன்னாள் செயலாளர் சபீல் நளீமி

0
451

(எம்.எச்.எம். அன்வர்)

புதிய காத்தான்குடி ஜும்ஆப்பள்ளிவாயல் களுக்கும் சம்மேளன சுழற்சிமுறை தலைமைப்பதவி எதிர்காலத்தில் வழங்க ஏற்பாடுகள் இடம்பெறுவதாக பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன முன்னாள் செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம். சபீல் நளீமி தெரிவித்தார்

29.05.2018 அன்று காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பள்ளிவாயலில் சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டம் தலைவர் பொறியியலாளர் ஏ.எம். தௌபீக் தலைமையில் இடம்பெற்றது.

தலைவர் தனதுரையில்,

இவ்வருடம் சம்மேளன தலைமைப் பதவி முறைப்படி முகைதீன் மெத்தைப் பள்ளிக்குரியது, அதற்காக அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்ற வருடம் மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் ஏற்பட்ட குழப்பநிலை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக ஒருவருடம் பிற்போடப்பட்டு்ள்ளது.

இந்த வகையில் தான் இந்த தலைவர் பதவியை கட்டிவைத்துக் கொண்டிருப்பதாக பிழையான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இவை நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேற்படி பொதுச்சபை நிருவாக சபை தெரிவில் காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினரால் பிரேரித்து அனுப்பி வைக்கப்பட்ட ஏ.சி.எம். ஜவ்பர் அவர்களின் சம்மேளன தலைமைத்துவ பதவி நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

33992973_1695569100509309_214756804410736640_n 34048653_1695568773842675_5008735807704399872_n 34018855_1695569020509317_6979411479082565632_n

LEAVE A REPLY