மாகாண சபை தேர்தலில் அம்பாறையில் பொறியியலாளர் நாபீர் முஸ்லிம் காங்கிரசில் களமிறக்கப்படலாம்

0
229

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

அம்பாறை மாவட்டத்தில் பல வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சமூக சேவைகள் அமைப்பான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் எதிரே வருகின்ற மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறக்கப்படலாம் என பரவலாக அம்பாறை மாவட்டத்தில் பேசப்பட்டு வருக்கின்றது.

மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தெரியவருவதாவது,

பொறியியலாளர் நாபீரை சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, நித்தவூர் அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கறைபற்று, பொத்துவில், மருதமுனை, போன்ற பிரதேசங்களில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கஸ் மற்றும் மற்றும் மாற்று கட்சிகளுடைய ஆரம்பகால போரலிகள், புத்திஜீவிகள், ஆதரவாளர்கள் என பலதரப்பட்ட தரப்பினராலும் வருகின்ற மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறங்குமாறு வேண்டப்படுவதாகவும், குறித்த விடயத்தினை முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமைக்கு தெரியப்படுத்தி வருவதாகவும் அறியக் கிடைக்கின்றது.

அத்தோடு நாபீர் முஸ்லிம் காங்கிரசில் களமிறக்கப்பட்டால் முஸ்லிம் காங்கிரசிற்கு எதிராக வாக்களிப்பவர்களும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நாபீர்க்கு வாக்களிப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள் என்பது முக்கிய விடயமாக பேசப்பட்டு வருகின்றது.

இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் தனது சேவையினை அம்பாறை மாவட்டத்துக்கு மாத்திரமன்றி பரவலாக கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் மேற்கொண்டு வரும் நாபீர் பெளண்டேசன் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்ளில் முஸ்லிம் காங்கிரசினுடைய வெற்றிக்கும், முக்கியமான ஊள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களின் வெற்றிகளுக்கு நேரடியாக அரசியல் களத்தில் குதித்து தேர்தல் பிரச்சார வேலைகளிலும் ஈடுபட்டிருந்தமை முஸ்லிம் காங்கிரசின் தலைமை அடங்களாக உயர்பீட உறுப்பினர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்ற விடயமாக அமைந்திருந்தது.

இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் வாழைச்சேனையில் இடம் பெற்ற கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் கடைசி கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் தலைமையானது நாபீர் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காகவும், அதன் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்களுக்காகவும் ஆற்றிவருகின்ற அர்ப்பனிப்புக்களை பற்றி மிகவும் பாராட்டி புகழ்ந்து உரையாற்றியமை நாபீர் பெளண்டேசன் சார்பில் எதிரே வருகின்ற மாகாண சபை தேர்தலில் பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தினை மையப்படுத்தி களமிறக்கப்படலாம் என்பதனை நிரூபிக்க கூடிய விடயமாக அன்றே ஊகித்துகொள்ள கூடியதாக இருந்தது.

எது எவ்வாறாக இருந்தாலும் நாபீர் பெளண்டேசானது தனது அரசியல் முன்னெடுப்புக்களையும், தனது செல்வாக்கினையும் அம்பாறை மாவட்டத்தினை மட்டும் மையப்படுத்தி மேற்கொள்லாமல் மட்டக்களப்பு, திருகோணமலை என தனது அரசியல் காய் நகர்த்தல்களையும், மக்கள் ஆதரவினையும் இஸ்தீரப்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் உதுமான் கண்டு நாபீர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறக்கப்படும் பட்சத்தில் முஸ்லிம் காங்கிரசினுடைய வெற்றியானது அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்லாது மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களிலும் உறுதிப்படுத்தப்பட்ட வெற்றியாக மாற்றபடுவதற்கும் இலகு படுத்தப்படுவதற்கு பெரும் பங்கு வகிக்கும் என்பதே புத்திஜீவிகளின் கருத்தாக இருக்கும் அதே நேரத்தில் சமகால கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரசினுடைய அரசியலில் எதிர்வு கூறக்கூடிய விடயமாகவும் உள்ளது.

அந்த அடிப்படையில் உதுமான்கண்டு நாபீர் வருகின்ற மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறக்கப்படும் வாய்ப்புக்கள் இருக்கின்ற அதே நேரத்தில் அதிகப்படியான முஸ்லிம் காங்கிரஸ் போராலிகளின் விரும்பாகவும் இருக்கின்றது என்ற விடயம் சமகாலத்தில் அம்பாறை மாவட்டத்தில் முக்கிய பேசும் பொருளாக மாறியுள்ளது.

LEAVE A REPLY