தூக்கில் தொங்கிய தாயை கயிற்றை வெட்டி காப்பாற்றிய மகன்; திருமலையில் சம்பவம்

0
259

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை காந்திநகர் பகுதியிலுள்ள பெண்ணொருவர் தனது கணவர் மது அருந்திவிட்டு தனக்கு அநியாயம் செய்வதாக கூறி தற்கொலை செய்ய முயற்சித்த வேளை தனது சிறிய மகனால் காப்பாற்றப்பட்டு இன்று (30) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை, காந்திநகர் பகுதியிலுள்ள நகராட்சி மன்ற விடுதியில் வசித்து வரும் கே.நாகம்மா (51 வயது) என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த பெண்ணின் கணவரான கனேஷ பிள்ளை ஒவ்வொரு நாளும் நகராட்சி மன்றத்திற்கு வேலைக்கு சென்று வீடு திரும்பும் போது தொடர்ச்சியாக மது அருந்திவிட்டு வீடு வந்து சண்டை செய்வதாகவும் தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் தெரிய வருகின்றது.

தற்கொலை செய்ய முயற்சித்த பெண் தற்பொழுது திருகோணமலை விபத்து சேவைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

LEAVE A REPLY