மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

0
207

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு சிறைச்சாலையில் செவ்வாய்க்கிழமை (29.5.2018) இலவச மருத்துவ முகாமொன்று நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 200 கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதுடன் அவர்களின் பிறசர் மற்றும் நீரிழிவு தொடர்பான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தினால் இந்த இலவச மருத்துவ முhகம் இடம் பெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாமில் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் மகப்பேற்று வைத்திய நிபுனர் டாக்டர் கே.இ.கருணாகரன், மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ.பிரபாகரன் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் வி.தரிசன் உட்பட சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் கலந்து கொண்டு இந்த மருத்துவ முகாமில் கைதிகளை பரிசோதனை செய்ததுடன் சிகிச்சையையும் வழங்கினர்.

DSCN0929 DSCN0935 DSCN0936 DSCN0938

LEAVE A REPLY