தலைமறைவாகிய விமானப்படை வீரர் அனூஜன் கைது

0
270

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை கப்பல்துறை விமானப்படை முகாமில் கடமையிலிருந்த வேளை ரீ 56 துப்பாக்கி மற்றும் 90 ரவைகளுடன் தலைமறைவாகிய விமானப்படை வீரரை கைது செய்துள்ளதாகவும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பல்துறை விமானப்படை முகாமில் கடமையாற்றி வந்த ரீ ஜம்பத்தாறு துப்பாக்கி 01 மெகசீன் மற்றும் அவருடன் கடமையிலிருந்தவரின் 90 ரவைகளுடன் நேற்று அதிகாலை 28ம் திகதி தலைமறைவாகிய நிலையில் அவர் மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கோயிலடி பகுதியைச்சேர்ந்த அழகையா அனூஜன் (24வயது) என்பவரே இவ்வாறு தலைமறைவாகியவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரை விசாரணை செய்து வருவதாகவும் அதனையடுத்து திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY