காத்தான்குடியில் இம்முறை நோன்புப் பெருநாள் பஸார் ஆண்களுக்கு 2 நாட்களும் பெண்களுக்கு இரண்டு நாட்களும் நடாத்த தீர்மானம்

0
274

Asfar Chaiman kky(விஷேட நிருபர்)

காத்தான்குடியில் இம்முறை நோன்புப் பெருநாள் பஸார் ஆண்களுக்கு 2 நாட்களும் பெண்களுக்கு இரண்டு நாட்களும் நடாத்த தீர்மானித்துள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

நோன்புப் பெருநாளினை சிறப்பிக்கும் வகையில் வருடா வருடம் பெருநாள் பஸார் காத்தான்குடியில் இடம்பெருவது வழக்கமாகும்.

அந்தவகையில் இம்முறை பெருநாள் பஸாரினை காத்தான்குடி நகர சபை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் நடாத்தவுள்ளது.

அதில் ஆண்களுக்கு 2 நாட்களும் பெண்களுக்கு 2 நாட்களும் வௌவேறாக நடாத்த ஏற்பாடு செய்யப் படவுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

01

LEAVE A REPLY