கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு நாளை

0
94

(நிப்ராஸ் மன்சூர்)

கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு நாளை (30) புதன் கிழமை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தலைமையில் நடைபெறவுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இவ் அமர்வில் கடந்த மாத கூட்டரிக்கையை அங்கிகரித்தல், கொளரவ முதல்வரின் உரை, மாநகர சபையின் மக்கள் நல செயற்பாடுகளை சிறப்பான முறையில் மேற்கொள்ளும் வகையில் உப குழுக்களை தெரிவு செய்தல் மற்றும் முதல்வரின் ஏனைய அறிவித்தல்களுடன் கூட்டம் நிறைவுபெற உள்ளது.

மாநகர சபையின் செயலாளர் எ.எம். ஆரிபின் ஒப்பமிடப்பட்ட கூட்ட அழைப்பிதழ் கடிதம் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது ஒரு இரட்டை வட்டாரம் உட்பட 23 வட்டாரங்களிலிருந்து 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களாகவும், மேலும் 17 உறுப்பினர்கள் தெரிந்தெடுத்து அனுப்பப்பட்ட உறுப்பினர்களுமாக மொத்தம் 41 உறுப்பினர்கள் கல்முனை மாநகர சபைக்கு தெரிவுசெய்யப்பட்டார்கள்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கல்முனை மாநகர சபை அதிகூடிய உறுப்பினர்களை கொண்ட மாநகர சபை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY