படை வீரர்கள் எப்போதும் கௌரவிக்கப்படவேண்டியவர்கள்; படை வீரர்கள் தின நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம

0
240

(அப்துல் சலாம் யாசீம்)

நாட்டுக்காக தங்களது உயிரை அர்ப்பணித்த அவயவங்களை இழந்த படைவீரர்கள் என்றும் கௌரவிக்கப்பட வேண்டும் என்றும் அதன் அடிப்படையிலே ஒவ்வொரு வருடமும் படை வீரர் ஞாபகார்த்த தின நிகழ்வு மாகாண அடிப்படையில் சிறப்பன முறையில் அனுஸ்டிக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம நேற்று (28) திருகோணமலையில் நடைபெற்ற கிழக்கு மாகாண படை வீரர் தின நிகழ்வின்போது தெரிவித்தார்.

நாம் இன்று சுதந்திரமாக நல்லிணக்காக ஒரே குடையின் கீழ் வாழ படைவீரர்களின் அர்ப்பணிப்பே காரணம்.படை வீரர்கள் எவ்வித யுத்த மீறல்களையும் மேற்கொள்ளவில்லை.நாட்டு நலநன கருத்திற்கொண்டு கொடூர யுத்தத்தை நிறைவு செய்ய உயிரை பொருட்படுத்தாது விட்டுக்கொடுத்தமை என்றுமே போற்றப்பட வேண்டும்.

கடந்த அரசு யுத்தத்தை முடிவக்கு கொண்டு வந்ததாகவும் தற்போதைய அரசாங்கம் மக்களிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி சம வாய்ப்புக்களுடனான அபிவிருத்தியை ஏற்படுத்த செயற்பட்டு வருகின்றது. யுத்தத்தில் உயிர்களை இழந்த படை வீரர்களின் பிள்ளைகளி;ன் கல்வி நடவடிக்கைகளுக்கு தம்மால் முடியுமான உதவிகளினை வழங்குவதாவும் இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.சரத் அபேகுணவர்தன திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் ரணவிரு சேவா அதிகார சபையின் உப தலைவி திருமதி உபலாங்கனி மாலகமுவ கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள் முப்படை அதிகாரிகள் திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் படை வீரர்களின் பெற்றோர்கள் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

IMG_20180528_161516

LEAVE A REPLY