கல்முனை பொது நூலகத்தை மேன்படுத்தும் வகையில் அமைக்கப்படும் கட்டட நிர்மாணப் பணியினை துரிதப்படுத்த நடவடிக்கை

0
124

(அகமட் எஸ். முகைடீன்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் கல்முனை பொது நூலகத்தை மேன்படுத்தும் வகையில் அமைக்கப்படும் கட்டட நிர்மாணப் பணியினை பிரதி அமைச்சர் ஹரீஸ் நேற்று (28) திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

இவ்விஜயத்தின்போது கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சத்தார், கே.எம். தௌபீக், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி அன்புமுகைதீன் றோஷன், ஏ.எம். பைறூஸ், எம்.எஸ்.எம். நிசார் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

கல்முனை மாநகர சபை புதிய கட்ட நிர்மாணப் பணியினை ஆரம்பிக்கும் வகையில் கல்முனை மாநகர சபையினை தற்காலிகமாக கல்முனை பொது நூலகத்திற்கு மாற்றவுள்ளமையினால் குறித்த கட்டட நிர்மாணப் பணியினை துரிதப்படுத்தி நிறைவு செய்வதற்கான பணிப்புரையினை இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் ஒப்பந்தகார நிறுவனத்திற்கு விடுத்தார்.

IMG_3053 IMG_3061

LEAVE A REPLY