இஸ்ரேல் தாக்குதலில் இரு பலஸ்தீனர் வபாத்!

0
271

தெற்கு காசாவின் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் கண்காணிப்பு முகாம் ஒன்றின் மீது இஸ்ரேல் டாங்கி நடத்திய தாக்குதலில் நேற்று (27) இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ரபா நகரின் கிழக்கு பகுதியில் இடம்பெற்றிருக்கும் இந்த தாக்குதலில் 25 மற்றும் 28 வயது இளைஞர்களே கொல்லப்பட்டுள்ளனர். காசாவை பிரிக்கும் எல்லை வேலிக்கு அருகில் படையினர் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்ததை அடுத்தே இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பின் இரு இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளன. எனினும் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியாகவில்லை.

எல்லையில் இடம்பெற்ற ஊடுருவல் சம்பவத்திற்கு பதில் நடவடிக்கையாகவே இந்த வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் காசா எல்லை பகுதியில் கடந்த மார்ச் 30 தொடக்கம் பல வாரங்கள் நீடித்த ஆர்ப்பாட்டத்தின்போது இஸ்ரேல் இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 118 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

thinakaran.lk

LEAVE A REPLY