வடக்கு கிழக்கு உதைப்பந்தாட்ட பிரிமியர் லீக் கிண்ணம் கல்முனையில்; வெற்றியீட்டும் அணிக்கு 50 இலட்சம் பணப்பரிசு

0
421

(நிப்ராஸ் மன்சூர்)

வடக்கு கிழக்கு உதைப்பந்தாட்ட பிரிமியர் லீக் கிண்ணம், சுற்றுத்தொடர் ஏற்பாட்டாளர்களினால் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொது மக்களின் பார்வைக்காக கல்முனை மாநகரின் ஐக்கிய சதுக்கத்திற்கு இன்று (28) திங்கட் கிழமை கொண்டுவரப்பட்டது.

இதன்போது அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எம் இப்றாகிம், சம்மேளனத்தின் பொருளாளர் எம்.ஐ.எம்.ஏ. மனாஃப் ஆகியோருடன் மாவட்ட உதைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் உட்பட ஏனையோர் சுற்றுத்தொடரின் வெற்றிக்கிண்ணத்திற்கு வரவேற்பளித்திருந்தனர்.

வடக்கு கிழக்கின் 12 அணிகளுக்கிடையில் நடைபெறவிருக்கும் இவ் உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரை வெற்றியீட்டும் முதலாவது அணிக்கு 50 இலட்சம் பணப்பரிசும், இரண்டாவது அணிக்கு 30 இலட்சம் பணப்பரிசும், மூன்றாவது அணிக்கு 15 இலட்சம் பணப்பரிசும், நான்காவது அணிக்கு 5 இலட்சம் பணப்பரிசும் வழங்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY