2018 ஹஜ் யாத்திரை கடவுச்சீட்டுகளை 30 க்கு முன் ஒப்படைக்குமாறு உத்தரவு

0
359

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் இவ்­வ­ருடம் நிய­மிக்­கப்­பட்ட ஹஜ் முகவர் நிலை­யங்கள் ஹஜ் பய­ணி­களின் பயண உறுதி அத்­தாட்­சிப்­பத்­தி­ரங்­க­ளுடன் கட­வுச்­சீட்­டு­களை எதிர்­வரும் 30 ஆம் திக­திக்கு முன்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைக்க வேண்­டு­மென உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

ஹஜ் பய­ணி­களின் பயண உறுதி அத்­தாட்­சிப்­பத்­தி­ரங்­க­ளுடன் கட­வுச்­சீட்­டு­களை திணைக்­க­ளத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட வேண்­டிய இறுதித் தினம் கடந்த 24 ஆம் திக­தி­யென அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தாலும் பல ஹஜ் முக­வர்­களின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க இத்­தி­கதி நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் தெரி­விக்­கையில்,

இவ்­வ­ருடம் 3000 ஹஜ் கோட்டா கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. இவற்றில் 200 கோட்டா ஹஜ் வழி­காட்­டிகள், சமை­யற்­கா­ரர்கள் அழைத்­துச்­செல்­வ­தற்­காக பகிர்ந்­த­ளிக்­கப்­படும். 150 பேஸா விசாக்­களும் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. ஹஜ் முக­வர்­க­ளி­ட­மி­ருந்து ஹஜ் பயணிகளின் கடவுச்சீட்டுகள் கிடைக்கப்பெற்றதும் அவை திணைக்களத்தின் ஆவணங்களுடன் சரிபார்த்து பூர்த்தி செய்யப்படும் என்றார்.

Vidivelli.lk

LEAVE A REPLY