புகைத்தல் எதிர்ப்பு; அமைதிப் பேரணியும் விழிப்புணர்வும்

0
100

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்தின் சமூர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் மாபெரும் அமைதிப் பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

மே மாதம் 31ஆம் திகதி வியாழக்கிழமை கிரான் பிரதேசத்தில் காலை 9 மணிக்கு அமைதிப் பேரணியும் விழிப்பூட்டும் வீதி நாடகமும் நடத்தப்படவுள்ளது.

இதில் போதைப் பொருள் பாவனை, மற்றும் உடல், உள ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்த வகையான கெடுதல்களையும் விட்டொழிக்கும் விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதில் ஆர்வமுள்ள பொதுமக்களையும் சமூக நல நோக்காளர்களையும் கலந்துகொண்டு புகைத்தல் கேடுகளிலிருந்து எதிர்கால சந்ததியைப் பாதுகாக்குமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY