வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம்! வீதி புனர்நிர்மாணம், நிவாரணம் வழங்குவது குறித்து ஆராய்வு

0
357

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தின் மல்வானை, பியகம, ரக்சபான உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அப்பகுதிகளின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

மல்வானையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஜிப்ரி ஹாஜியார் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகு மூலம் சென்று கள நிலைமை தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியவசியத் தேவைப்பாடுகள் குறித்து கலந்துரையாடியதுடன், வெள்ளத்தால் சேதமான வீதிகளை புனர்நிர்மாணம் செய்வது தொடர்பிலும் ஆராய்ந்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரணங்களை குறித்த பகுதிகளுக்கு உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவைத் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்த இராஜாங்க அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது அமைச்சினால் முடியுமான சகல உதவிகளை செய்வதாகவும் குறிப்பிட்டார்.

WhatsApp Image 2018-05-27 at 18.45.29 WhatsApp Image 2018-05-27 at 18.45.30 (1) WhatsApp Image 2018-05-27 at 18.45.30 WhatsApp Image 2018-05-27 at 18.45.32 WhatsApp Image 2018-05-27 at 18.45.35 WhatsApp Image 2018-05-27 at 18.45.36 (1) WhatsApp Image 2018-05-27 at 18.45.36 WhatsApp Image 2018-05-27 at 18.45.37

LEAVE A REPLY