முஸ்லிம்களுக்கெதிராக சிவசேனாக்கள் முன்னெடுக்கும் துரோகத்தனமான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன்: பிர்தௌஸ் நழீமி

0
427

(விஷேட நிருபர்)

முஸ்லிம்களுக்கெதிராக சிவசேனாக்கள் முன்னெடுக்கும் துரோகத்தனமான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான அஷ்ஷெய்ஹ் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி தெரிவித்துள்ளார்.

இன்று (27) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சாவகச்சேரியில் இடம்பெற்ற மாடறுப்பதற்கு எதிரான உண்ணா நோன்புப் போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்த மறவன்புலவு சச்சிதானந்தன் வெளியிட்டுள்ள இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான பாரதூரமான கருத்துக்களானது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியதும், இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான இந்துத்துவா சிவசேனா போன்ற இறக்குமதி சக்திகளால் பின்னப்படும் சதிவலைகள் தொடர்பான அபாய அறிவுப்புக்களுமேயாகும்,

யுத்தத்துக்குப் பின்னரான சூழ்நிலையில் தமிழ், முஸ்லிம் உறவினைச் சீர்குலைப்பதற்கான முயற்சிகளில் இவ் இந்துத்துவா சிவசேனாக்களின் இலங்கை முகவர்கள் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பல்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுவருவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

அந்தத் தொடர் நிகழ்ச்சி நிரலிலேயே மாடறுப்பதற்கெதிரான போராட்டம் என்ற பெயரில் தொடங்கி தற்போது முஸ்லிம்கள் இந்நாட்டின் பூர்வீகக்குடிகள் அல்ல என்கிற அளவுக்கு தமது கருத்துக்களக முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்,

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தினை மறுத்து இந்நாட்டினைவிட்டும் எம்மை அந்நியர்களாக அல்லது வந்தேறுகுடிகளாக்க் காட்ட சிவசேனாக்கள் முன்னெடுக்கும் இவ்வாறான துரோகத்தனமான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன்,
எமது தனித்துவங்களையும், கலாசாரங்களையும், உணவுப்பாரம்பரியங்களையும் மறுதலிக்கும் உரிமை இந்நாட்டில் எவருக்கும் கிடையாது என்பதோடு நாங்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் என்பதனையும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு மீண்டும் ஒரு முறை அளுத்திக் கூற விரும்புகின்றேன்.

இதனை மறுதலிக்கும் எந்தத் தரப்பினரோடும் ஜனநாயக ரீதியாக நாம் போராடத்தயார் என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY