நிலைமாறு கால நீதி தொடர்பிலான செயலமர்வு

0
218

(ஹஸ்பர் ஏ. ஹலீம்)

நிலை மாறு கால நீதி தொடர்பிலான இளைஞர் யுவதிகளுக்கான செயலமர்வு நேற்று (26) ஞாயிற்றுக் கிழமை விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் திருகோணமலை அலுவலகத்தில் இடம் பெற்றது.

இதனை விழுது நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.நிலை மாறுகால நீதி,நிலைமாறுகால நீதிப் பொறி முறையான உண்மையைக் கண்டறிதல், இழப்பீடு வழங்குதல், நீதியை நிலைநாட்டுதல், மீள நிகழாமை தொடர்பிலான கருத்துக்கள் யுத்த காலத்துக்குப் பின்னரான சமூக நிலைமைகள் சட்டரீதியான ஏற்பாடுகளை செய்யும் முகமான செயற்பாடுகள், காணாமல் போனோர் தொடர்பிலான நிலை மாறுகால நீதியின் விழிப்புணர்வு, புதிய அரசியலமைப்பில் தற்கால நடை முறை ஆட்சி உள்ளிட்ட பல்வேறு வகையான விளக்கம் இதில் அளிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள் இதில் பங்குபற்றினர் வளவாளர்களாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அரசியல் செயற்பாட்டாளர் திருமதி கே.தர்சினி, திருமதி ஜெயதீபா உட்பட அரசியல் நல்லிணக்க கற்கை நெறி தொடர்பிலான டிப்ளோமா மாணவர்கள் போன்றோர்களும் கலந்து கொண்டார்.

20180526_100055~2

LEAVE A REPLY