குப்பைகளை புதைக்க தோண்டிய குழிக்குள்ளிருந்து ரீ.-56 ரக துப்பாக்கி மீட்பு

0
139

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு வாகரை, கதிரவெளி பிரதேசத்தில் வீட்டுத் தோட்டப் பகுதியில் குப்பைகளைப் புதைக்கத் தோண்டிய குழிக்குள்ளிருந்து நேற்று (26) சனிக்கிழமை ரீ.-56 ரக துப்பாக்கி வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, வீட்டுத் தோட்ட விவசாயி ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் குப்பைகளைப் புதைப்பதற்காக குழி ஒன்றை வெட்டிய போது பொலித்தீனால் சுற்றப்பட்ட மர்மப் பொதியொன்று வெளிக்கிழம்பியுள்ளது.

அது சந்தேகத்திற்குற்குரிய பொருளாக இருக்கலாம் என ஊகித்த அவர் விடயத்தைப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

ஸ்தலத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் பொலித்தீனால் சுற்றப்பட்ட பொதியை குழியிலிருந்து வெளியே எடுத்து பரிசோதித்த போது இந்தத் துப்பாக்கி நன்கு சுற்றிக்கட்டப்பட்டு துருப்பிடிக்காமல் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

பொலிஸார் இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

1

LEAVE A REPLY