திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவானோருக்கான கலந்துரையாடல் நாளை சம்பூரில்

0
148

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கான கலந்துறையாடலும்,ஆலோசனைக்கூட்டமும் நாளை (28) திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கலந்துறையாடலில் மன்றங்களின் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும்,சபைகளின் ஒழுங்கு விதிமுறைகள் சம்பந்தமாகவும், உள்ளுராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது தொடர்பாகவும் கலந்துறையாடப்பபடவுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தெரிவித்தார்.

இக்கலந்துறையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கலந்து கொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY