ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் OCC – 90 நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு!

0
316

(வாழைச்சேனை நிருபர்)

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 1990ம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரன தர பரீட்சை எழுதிய மாணவர்களின் OCC – 90 நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று சனிக்கிழமை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

அமைப்பின் தலைவரும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளருமான எஸ்.ஏ.எம்.றியாஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் விஷேட பேச்சாளராக அஷ்ஷெய்க் எஸ்.எம்.ஸனூஸ் (நளீமி) கலந்து கொண்டு ஒற்றுமையினால் ஏற்படும் நன்மைகள் தொடர்பாக உரையாற்றினார்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் ழுஊஊ – 90 நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்த இரண்டாவது வருட இப்தார் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3

LEAVE A REPLY