நோன்பு காலத்தில் காத்தான்குடி நகரை ஒளிமயமாக்கும் நடவடிக்கை நகர முதல்வரால் ஆரம்பித்து வைப்பு

0
491

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

புனித றமழான் நோன்பு காலம் தற்போது அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் காத்தான்குடி நகரை ஊடறுத்தச் செல்லும் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியை ஒளியூட்டி அலங்கரிக்கும் நடவடிக்கையை காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் சனிக்கிழமை இரவு ஆரம்பித்து வைத்தார்.

காத்தான்குடி நகர தெருவின் நடுவே இயற்கை எழிலோடு காணப்படும் பேரிச்ச மரங்களுக்கிடையே இந்த பல வர்ண நகர மின்னொளி அலங்கரிப்பு மேலும் மெருகூட்டி கவர்ச்சியாகக் காட்சியளிக்கிறது.

அத்தோடு தெருக்களில் அசௌகரியமின்றி குதூகலமாகச் செல்வதற்கு வசதியாகவும் இது அமைந்துள்ளதாக பயணிகளும் வாகன ஓட்டிகளும் தெரிவிக்கின்றனர்.

கூடவே, றமழான் பண்டிகைக்கான புத்தாடைகளைக் கொள்வனவு செய்ய நகரத் தெருவுக்கு வருவோருக்கு இது கண்கொள்ளாக் காட்சியாகவும் அமைந்துள்ளது.

1 3 4 5 6 7

LEAVE A REPLY