மட்டக்களப்பு மாவட்டத்தில் 2840 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு!

0
174

(அப்துல் சலாம் யாசீம்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2840 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய தொற்று நோயியலாளர் டொக்டர் தர்ஷினி காந்தரூபன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் டெங்கு பரவி வருவதினால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இன்று (27) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள கேட்போர் கூடத்தில் விஷேட கலந்துறையாடலொன்று நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

14 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டக்களப்பு, ஏறாவூர், செங்கலடி, ஓட்டமாவடி, கோரளைப்பற்று, களுவாஞ்சிக்குடி போன்ற பகுதிகளில் அதிகளவில் டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும் ஜனவரி மாதத்தில் ஜநூற்றி தொன்னூற்றி எட்டு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும் பெப்ரவரியில் நானூற்றி தொன்னூற்றி ஆறு பேரும் மார்ச் மாத்தில் ஜநூற்று நாற்பத்தெட்டு பேரும் ஜநூற்றி எழுபத்தேழு பேர் ஏப்ரல் மாதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மே மாதம் அறுநூற்றி இருபத்தொறு டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த அனைத்து திணைக்களங்களும் முன்வர வேண்டுமெனவும் அரச திணைக்களங்களின் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்பூட்ட்களை நடாத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக்கலந்துறையாடலில் கிழக்கு மாகாண சுகாதார திணைக்ளத்தின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், மாகாண பணிப்பாளர் டொக்டர் கே.முருகானந்தம், கிழக்கு மாகாண சமூக வைத்திய நிபுணர் டொக்டர் அருள்குமரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC_8712 DSC_8723

LEAVE A REPLY