தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞர் பலி

0
107

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞரொருவர் பலியானதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை (25.05.2018) இரவு மட்டக்களப்பு, சந்திவெளி ஆற்றில் நடந்த இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் சந்திவெளி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த யோகராசா ரரிஷன் (வயது 21) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, இவர் திகிலிவட்டை கிராமத்தில் தனது நண்பரின் மரண வீட்டுக்கு செல்வதற்காக தனது மற்றுமிரு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தோணி மூலமாக சந்திவெளி ஆற்றைக் கடக்க முற்பட்ட வேளையில் தோணி கவிழ்ந்துள்ளது.

இதனால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதேவேளை அவருடன் கூடச் சென்ற ஏனைய நண்பர்கள் இருவரும் உயிர் தப்பியுள்ளனர்.

இச்சம்பவம்பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

1 (1)

LEAVE A REPLY