ஏறாவூர் நகர சபையின் செயலாளரது நடவடிக்கைகளைக் கண்டித்து வேலைநிறுத்தமும் கவனயீர்ப்புப் போராட்டமும்

0
84

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் நகர சபையின் அனைத்து சுகாதார தொழிலாளர்கள், வேலையாட்கள் மற்றும் சாரதிகள் நேற்று (26) சனிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் கவனயீர்ப்புப் போராட்டத்தையும் நடாத்தினர்.

ஏறாவூர் நகர சபையின் செயலாளரது தவறான அணுகுமுறையினைக்கண்டித்து நகர சபை முன்றலில் தாம் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தின் காரணமாக ஏறாவூர் நகர சபைப் பிரதேசத்தில் திண்மக்கழிவகற்றும் நடவடிக்கைகள் நடைபெறவில்லை.

அமைய அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் உரிய காலப்பகுதியில் வழங்கப்படாமை, சீருடைகள் விநியோகிக்கப்படாமை, பத்து மாதகால இடர்கடன் வழங்கப்படாமை மற்றும் செயலாளரும் நிதியுதவியாளரும் ஊழியர்களுடன் கடுமையாக நடந்துகொள்வதோடு தகாத வார்த்தைப்பிரயோகம் செய்தல் போன்ற பல்வேறு விடயங்களை தாங்கள் அனுபவித்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதன்போது நகர சபையின் முதல்வர் இறம்ழான் அப்துல் வாசித் மற்றும் உப தவிசாளர் எம்எல். றெபுபாசம் ஆகியோர் அவ்விடத்திற்கு வருகைதந்து ஊழியர்களது கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன் ஊழியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் ஒன்றையும் கையேற்றனர்.

செயலாளரது செயற்பாடுகள் தொடர்பாக விசாரணை நடாத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உத்தரவாதமளித்ததுடன் பிரதேசத்தின் சுகாதார நலனைக் கருத்திற்கொண்டு உடனடியாக வேலைக்குத்திரும்புமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.

எனினும் ஊழியர்களின் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் தொடர்ந்தது.

0

LEAVE A REPLY