உலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்

0
367

உலக அளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடங்களின் பட்டியலில் தாஜ்மஹால் 6வது இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் சுற்றுலா இடங்களை கவர்ந்த இடங்களை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் 68 நாடுகளில் உள்ள 759 முக்கிய சுற்றுலா தளங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கம்போடியா நாட்டில் உள்ள அக்ஹோர் வாட் கோயில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஸ்பெயினில் உள்ள பிளாசா டி எஸ்பனவும் 3வது இடத்தை அபுதாபியில் உள்ள ஷேக் ஸாய்டு கிராண்ட் மசூதியும் பெற்றுள்ளது.

மேலும் இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகா, ஸ்பெயினில் மெஸ்ஸ்கி கதீட்ரல் டி கார்டோபா,இத்தாலியின் மிலனில் உள்ள டோம்மோ டி மிலானோ, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அல்காஸ்கிரி தீவு, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பாலம், ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் உள்ள அமெரிக்கா மற்றும் பாராளுமன்றம் ஆகிய சுற்றுலா தளங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

பட்டியலில் 6வது இடம் உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு கிடைத்துள்ளது.

ஆசியாவில் பட்டியலில் இடம்பெற்றவை :

* ஆங்கோர் வாட் ஆசிய பட்டியலில் முதலிடம்
* தாஜ் மஹால்,இரண்டாம் இடம் பிடித்தது
* ரிக்லைனிங் புத்தா (வாட் ப்ஹோ),பாங்காக், தாய்லாந்து,
* Mutianyu பெருஞ்சுவர்,பெய்ஜிங், சீனா
* ஃபுஷிமி இனாரி-தைஷா ஷ்ரின் கியோட்டோ, ஜப்பான்,
* மியான்மரில் உள்ள ஷ்வேடகன் பகோடா,
* மலேசியா,நாட்டின் கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம்
*வியட்நாம் ஹோ சி மின் நகரில் உள்ள Cu Chi Tunnels

metronews.lk

LEAVE A REPLY