மெஸிக்கு ஐந்தாவது ஐரோப்பிய தங்கப் பாதணி

0
227

ஸ்பெய்னில் நடை­பெற்­று­வந்த லா லீகா கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் ஒரே பருவ காலத்தில் அதிக கோல்­களைப் போட்­ட­மைக்­கான ஐரோப்­பிய தங்கப் பாத­ணியை பார்­சி­லோனா கழக முன்­கள வீரர் லயனல் மெஸி ஐந்­தா­வது தட­வை­யாக வென்­றெ­டுத்­துள்ளார்.

நடப்பு பரு­வ­கால லா லிகா (முதற்­தர லீக்) போட்­டி­களில் 34 கோல்­களைப் போட்­டதன் மூலம் ஆர்­ஜன்­டீன தேசிய வீர­ருக்கு இந்த விருது சொந்­த­மா­னது. மேலும் லயனல் மெஸியின் சிறந்த பங்­க­ளிப்பின் உத­வி­யுடன் பார்­சி­லோனா கழகம் 25ஆவது தட­வை­யாக லா லிகா சம்­பியன் பட்­டத்தை சூடி­யது.

கேம்ப் நூ விளை­யாட்­ட­ரங்கில் ரியல் சோசிடெட் கழ­கத்­துக்கு எதி­ராக பார்­சி­லோனா வெற்­றி­பெற்ற போட்­டியில் மாற்­று­வீ­ர­ரா­கவே மெஸி விளை­யா­டினார்.நடப்பு பரு­வ­கா­லத்தில் 32 போட்­டி­களில் விளை­யா­டிய மெஸியை விட 2 கோல்கள் பின்­னி­லையில் லிவர்பூல் வீரர் மொஹமத் சலா இருக்­கின்றார். டொட்­டென்ஹாம் கழ­கத்தின் முன்­கள வீரர் 30 கோல்­க­ளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். இவர்கள் இரு­வரும் ஆங்­கி­லேயே ப்றிமியர் லீக் போட்­டி­களில் விளை­யாடி வரு­கின்­றனர்.

முதல்­தர கால்­பந்­தாட்டப் போட்டிகளில் ஐந்து தடவைகள் ஐரோப்பிய தங்கப் பாதணியை வென்ற முதலாவது வீரர் லயனல் மெஸி ஆவார்.

Metronews.lk

LEAVE A REPLY