வழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…

0
159

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் நோன்பு பத்து முடிவடைவதற்குள் ஆயிரக்கான போராளிகள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு நடாத்தப்பட்டு வரும் இஃப்தார் நிகழ்வானது இம்முறை உரிய நேரத்தில் கல்குடாவிற்கான முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் கணக்கறிஞருமான றியாலின் ஏற்பாட்டினால் நடாத்தப்படா விட்டால் அமைப்பாளர் றியால் மீது அதிருப்தி கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் அணியினரால் நடாத்தப்படும் என பரவலாக கல்குடாவில் பேசப்பட்டு வருகின்றது.

இது சம்பந்தமாக மேலும் தெரிய வருவதாவது கிழக்கு மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் கட்சியின் தலைமையும் அமைச்சருமான அப்துர் றவூப் கிபத்துல் ஹக்கீம் கலந்து கொள்ளும் இஃப்தார் நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்ற அதே நேரத்தில் கல்குடாவில் பிரமாண்டமாக இடம் பெறும் குறித்த நிகழ்வானது இம்முறை இடம் பெறக்கூடிய சாத்திய கூறுகள் அரிதாக காணப்படும் நிலையே இருந்து வருகின்றது.

ஆகவே குறித்த இஃப்தார் நிகழ்வினை கட்சியின் தலைமை வேண்டி கொண்டதற்கினங்க கல்குடாவில் உரிய நேரத்தில் நடாத்தா விட்டால் அமைப்பாளர் றியால் மீது அதிருப்தி கொண்ட அணியினர் முஸ்லிம் காங்கிரசினுடைய பிரதி அமைச்சர் அலிசாஹிர் மெளலானாவின் வழிகாட்டலின் கீழ் கல்குடாவில் இஃப்தார் பிரமாண்டமாக நடாத்தப்படும் என அதிருப்தியாளர்களை கொண்ட அணியின் முக்கியஸ்தர் ஒருவரை வினவிய பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY