மனைவி மரணம்; தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்

0
535

hirunews_shootகொகருல்ல காவற்துறையில் பணியாற்றி வந்த காவற்துறை கான்ஸ்டபில் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இன்று இரவு 7.30 மணியளவில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

48 வயதுடைய இந்த கான்ஸ்டபில் கொகருல்ல காவற்துறை குடியிருப்பில் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் குறித்த கான்ஸ்டபிலின் மனைவி வாகன விபத்தொன்றில் சிக்கி சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று மாலை அவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்த தகவல் கிடைத்ததை தொடர்ந்தே குறித்த கான்ஸ்டபில் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: hirunews.lk

LEAVE A REPLY