“கிழக்கு மாகாண படை வீரர் கௌரவிப்பு விழா” திருகோணமலையில் …

0
159

(அப்துல் சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண சபையும் திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “கிழக்கு மாகாண படை வீரர் கௌரவிப்பு விழா” எதிர்வரும் 28ம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு திருகோணமலை பிரட்றிக்கோட்டை வளாகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தலைமையில் நடைபெறவுள்ளது.

“தேசத்தின் படை வீரர் தினத்தை கொண்டாடுவோம்” எனும் தொனிப்பொருளில் இலங்கைத்தீவில் ஜக்கியத்தை ஏற்படுத்தி சமாதானத்தை நிலை நாட்டுவதற்கு பங்களிப்பை நல்கிய தம் உயிரையும் உடலையும் அர்ப்பணித்த துணிச்சல் மிகு படை வீரர்களை கௌரவிக்கும் முகமாகவே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

IMG-20180523-WA0021

LEAVE A REPLY