தென் கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் திருகோணமலை விஜயம்

0
346

(அப்துல் சலாம் யாசீம்)

தென் கொரியா குடியரசின் இலங்கைக்கான தூதுவர் ஹியொன் லீ (Heon Lee) கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் அழைப்பின் பேரில் இன்று வௌ்ளிக்கிழமை திருகோணமலைக்கு மூன்று நாள் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கு முதல் தடவையாக வருதை தந்த தென் கொரியாவின் இலங்கைக்கான தூதுவரை வரவேற்கும் நிகழ்வு ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன தலைமையில் நடைபெற்றதுடன் கிழக்கு மாகாணத்திலுள்ள திணைக்களங்களின் உயரதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து தூதுவர் ஆளுநர் அலுவலகத்தில் திணைக்கள செயலாளர்களுடனும்,அலுவலக அதிகாரிகளுடனும் நட்புறவுக்கலந்துறையாடலொன்றை நடாத்தினார்.

இக்கலந்துறையாடலின் போது திருகோணமலை மாவட்டத்திற்கு வருகை தந்தமையையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் 1999ம் ஆண்டு தொடக்கம் 2002ம் ஆண்டு வரை சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க அவர்கள் ஜனாதிபதியாக இருக்கின்ற போது தான் தெற்கு கொரியா தூதுவர் ஆலயத்தில் இரண்டாவது செயலாளராக கடமையாற்றிய போது வடக்கு கிழக்கில் பாரிய யுத்த சூழ் நிலை காணரமான விஜயம் மேற்கொள்ள முடியவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் மிக முக்கியமான இடங்களை பார்வையிடவுள்ளதாகவும் கொரியாவினுடைய பங்களிப்பினை வழங்குவதற்குறிய சாதகமாக முன்னெடுப்புக்களை மேற்கொள்வதாகவும் தூதூவர் இதன் போது குறிப்பிட்டார்.

DSC_7824

LEAVE A REPLY