மருதூர் ஜலாலியன்ஸ் முப்பெரும் விழா

0
287

(ஹுதா உமர்)

சாய்ந்தமருது கமு/அல் ஜலால் வித்தியாலய பழைய மாணவர் சங்க ஏட்பாட்டில் திறமையான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இப்தார் நிகழ்வும் இன்று (25) கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

விழா அறிமுக உரை நிகழ்த்திய பழைய மாணவர் சங்க கல்வி பிரிவு தலைவரும் விழா ஏட்பாட்டு குழு செயலாளருமான என்.ஜே. இசட். அனஸ் இந்த பாடசாலையின் வளர்ச்சியில் இனிவரும் காலங்களில் எங்களின் பங்களிப்பை முழுமையாக வழங்க எங்கள் சங்கம் திடமாக இருப்பதாகவும் பாடசாலை தரப்பிலும் எங்களுக்கு முழு உத்துழைப்பு தேவை என வலியுறுத்தினார். மேலும் கடந்த கால கல்வி நிலைகள் பற்றி எடுத்துரைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய பாடசாலை அதிபர் திரு எம்.எஸ் நபார் அவர்கள் இன்றைய நிகழ்வுக்கு வித்திட்ட ஆலம்விழுது நிகழ்வை செய்த வியூகம் தொலைகாட்சி பிரதானி ஜனூஸ் சம்சுதீன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பாடசாலையின் கல்விநடவடிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் பழைய மாணவர்கள் சங்க அவசியம் பற்றி உரையாற்றினார்.

தொடர்ந்தும் இடம்பெற்ற மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வை தொடர்ந்து பழைய மாணவர் சங்க உறுப்பினர் முகம்மது அஸ்கர் அவர்கள் மார்க்க உபணியாசம் நிகழ்த்தினார்.

கடந்த காலத்தில் பாடசாலை மாணவர்கள் கல்விக்கு உதவிய கடந்த கால ஆசிரியர்கள், அதிபர்கள் கௌரவிக்கப் பட்டனர்.

இந்நிகழ்வில் கமு/அல் ஜலால் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.நபார் மற்றும் பிரதி அதிபர், உப அதிபர்கள், ஆசிரியர்கள், கடந்த கால அதிபர்கள், கடந்த காலத்தில் சேவையாற்றிய ஆசிரியர்கள் பழைய மாணவர்கள், ஏனைய பாடசாலை அதிபர்களான எம்.ஐ.எம்.இல்யாஸ், எம்.ஐ. சம்சுதீன், எம்.எஸ்.மதனி மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இப்தார் மற்றும் இராபோசன விருந்துடன் நிகழ்வு முற்று பெற்றது.

20180525_170419 20180525_171624 20180525_171738 20180525_174014-1 20180525_174051 20180525_175837 20180525_175853

LEAVE A REPLY