காத்தான்குடி நகர சபைக்கு தீ அணைக்கும் இயந்திரமொன்று அவசியம்

0
258

(விஷேட நிருபர்)

காத்தான்குடி நகர சபைக்கு தீ அணைக்கும் இயந்திரமொன்று இல்லாததால் இப்பிரதேசத்தில் ஏற்படும் தீ விபத்துக்களை அணைப்பதற்கு பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மஞ்சந்தொடுவாய் பகுதியில் இரண்டு மர ஆலைகள் தீப் பிடித்து எரிந்த போது காத்தான்குடி நகர சபைக்கென தீ அணைக்கும் இயந்திரமொன்று இருந்திருந்தால் அதன் மூலம் இந்த மர ஆலைகளின் தீயை உடனேயே அணைத்து ஏற்பட்ட சேதத்தினை குறைத்திருக்கலாம் எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

காத்தான்குடி நகர சபை பிரிவு மக்கள் சன அடர்த்தியான பிரதேசமாக நெருக்கமான இடமாக இருப்பதாலும் அருகருகே வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தொழிற்சாலைகள் காணப்படுவதாலும் திடீரென ஏற்படும் தீ விபத்துக்களை உடனேயே அணைப்பதற்கு தீ அணைக்கும் இயந்திரம் அவசியமாக தேவைப்படுகின்றது.

இது விடயத்தில் காத்தான்குடி நகர சபை தவிசாளரும் நகர சபை உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

LEAVE A REPLY