ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி கோமரங்கடவெல மக்கள் ஆர்ப்பாட்டம்

0
341

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை கோமரங்கடவெல வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட மதவாச்சி சிங்கள மஹா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி இன்று (23) காலை புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் பிரதான கதவை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோமரங்கடவெல வடக்கு கல்வி வலயத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியான மதவாச்சி சிங்க வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் வறுமைக்ேகாட்டின் கீழ் வாழ்ந்து வருவதாகவும் தங்களுடைய பிள்ளைகளை கல்வியாளர்களாக உருவாக்க வேண்டுமென நினைக்கின்ற போதிலும் தங்களுடைய கற்றல் நடவடிக்கைகளுக்கு எதுவித அபிவிருத்திகளும் செய்யப்படவில்லையெனவும் தங்களுடைய பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமித்து தருமாறும் கோரியே இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொள்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

294 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்று வருவதாகவும் 1 தொடக்கம் 11ம் ஆண்டு வரை வகுப்புக்கள் காணப்படுவதாகவும் மிகுதியாக உள்ள ஆசிரியர்களை நியமித்து தருமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பிரதான கதவை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் திருகோணமலை கண்டி பிரதான வீதியையும் மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

DSC_0356 DSC_0367 DSC_7542 DSC_7556 DSC_7576

LEAVE A REPLY