பொலிசார் பொது மக்கள் காலடிக்குச் சென்று தமது சேவைகளை வழங்குகின்றனர்

0
148

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர தெரிவிப்பு

DSCN0828(விஷேட நிருபர்)

பொலிசார் பொது மக்கள் காலடிக்குச் சென்று தமது சேவைகளை வழங்குகின்றனர். அதற்காகவே பொலிஸ் நடமாடும் நிலையங்கள் திறக்கப்படுகின்றன என கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர தெரிவித்தார்.

கிராமத்திற்கு பொலிஸ் எனும் விஷேட பொலிஸ் நடமாடும் சேவையின் கீழ் பொலிஸ் நடமாடும் நிலையம் நேற்று (22) செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா வேடர்குடியிருப்பு கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபலி ஜெயசேகர இந்த நடமாடும் பொலிஸ் நிலையத்தினை திறந்து வைத்தார்.

DSCN0829இந்த வைபவத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.குமார சிறீ, காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.ஜெயசீலன், ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் ஆரையம்ப மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் அல்மேரா மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி உட்பட ஆரையம்பதி பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்த நடமாடும் பொலிஸ் நிலையமானது பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய திறக்கப்பட்டுள்ளது.

DSCN0837ஓவ்வொரு பொலிஸ் நிலையங்களும் இவ்வாறான ஒரு பொலிஸ் நடமாடும் நிலையத்தினை திறக்க வேண்டும். அந்த திட்டத்தின் கீழ் இந்த பொலிஸ் நடமாடும் நிலையமும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த பொலிஸ் நடமாடும் நிலையமானது ஒரு மாத காலத்திற்கு செயற்படும் இதன் மூலம் மக்கள் தமது பல் வேறு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும்.

பொலிசார் பொது மக்களின் காலடிக்கு சென்று தமது சேவை வழங்குகின்றனர்.

இந்த நடமாடும் பொலிஸ் நிலையத்தின் மூலம் சிரமதானம் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் கல்வி அபிவிருத்தி மற்றும் ஏனைய ந்வடிக்கைகளும் மேற் கொள்ளப்படும்.

இதனை மக்கள் சரியாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY