ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு

0
297

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் நகர சபையின் மே மாதத்திற்கான மாதாந்த அமர்வு நாளை (24) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நகர சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக நகர சபைச் செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அறிவித்துள்ளார்.

நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்திற்கு நகர சபையின் தமிழ் முஸ்லிம் ஆண் பெண் உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய விடயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக நகரசபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.

LEAVE A REPLY