கிரான்குளத்தில் விபத்து; தப்பியோட முற்பட்ட சாரதியை துரத்திப் பிடித்து தாக்கிய பொதுமக்கள்

0
181

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் தனியார் பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதியதன் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மட்டக்களப்பு திராய்மடு பகுதியைசேர்ந்தவரே படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டி இந்த விபத்தினை ஏற்படுத்தியதாகவும் இதன்போது மோட்டார் சைக்கிளை அடித்த பஸ் நீண்ட தூரம் சைக்கிளை இழுத்துச்சென்றதாகவும் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

விபத்தினை தொடர்ந்து பஸ் சாரதி தப்பிச்சென்று வேறு ஒரு பஸ்சில் ஏறி தப்பிச்செல்ல முயன்றபோது பொதுமக்கள் பஸ் சாரதியை பிடித்து தாக்குதல் நடாத்தியதன் காரணமாக அங்கு பதற்ற நிலமை ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் குறித்த சாரதியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

IMG-20180522-WA0029 IMG-20180522-WA0032

LEAVE A REPLY