பள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு

0
531

தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையில், சீனாவில் உள்ள அனைத்து பள்ளிவாயல்களிலும் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சீன அரசின் ஒரு அங்கமான சீன இஸ்லாமிய சங்கம், அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

“அனைத்து பள்ளிவாயல்களிலும் உரிய இடத்தில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும். இதன் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் தேசப்பற்றை ஊக்குவிக்க முடியும். தேசியம் மற்றும் சிவில் கொள்கைகள் குறித்த கொள்கைகள் பலப்படுத்தப்படும். கம்யூனிஸ்ட்டின் சமூக மதிப்புகள் குறித்த கொள்கைகளை ஒட்ட வேண்டும். சீன அரசின் சாசனம் மற்றும் புதிய மத கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் உள்ளிட்ட சட்ட திட்டங்களை கற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(www.dinamalar.com)

LEAVE A REPLY