தான் பெற்ற பிள்ளையை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல்

0
512

(அப்துல் சலாம் யாசீம்)

மூதூர் நெய்தல் நகர் பகுதியில் தான் பெற்று வளர்த்த 11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த தந்தையை எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (22) செவ்வாய்கிழமை மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.

மூதூர் நெய்தல் நகரைச் சேர்ந்த ரபாய்தீன் இல்யாஸ் (35 வயது) என்பவருக்கே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது சிறுமியின் தாயும்,தந்தையும் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வேறு திருமணம் செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது சகோதரரும் தந்தையின் பராமறிப்பில் இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட தந்தை இரண்டாவது திருமனம் செய்து மனைவியை வெளிநாடு அனுப்பியுள்ளதாகவும் கடந்த இரண்டு வருடங்கள் தான் பெற்ற மகளை மனைவியாக வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

சிறுமியின் உறவினர்களும்,அயலவர்களும் செய்த முறைப்பாட்டையடுத்து சிறுமியை விசாரணை செய்த போது தந்தையின் செயற்பாடு தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY