2018 ஹஜ் பயணம் செல்ல முடியாவிடின் உடன் அறிவிக்கவும்

0
151

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் இவ்­வ­ருடம் ஹஜ் பயணம் மேற்­கொள்­வ­தற்­கென தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தவிர்க்க முடி­யாத கார­ணங்­க­ளினால் ஹஜ் கட­மையை மேற்­கொள்­ள­மு­டி­யா­தி­ருப்பின் அவர்கள் உட­ன­டி­யாக திணைக்­க­ளத்தை தொடர்பு கொண்டு அறி­விக்­கும்­படி வேண்­டப்­பட்­டுள்­ளனர்.

அவ்­வாறு அறி­விப்­ப­தற்குத் தவறும் ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் அடுத்த வருட ஹஜ்­யாத்­தி­ரி­கர்கள் பட்­டி­யலில் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டார்கள். இம்­முறை ஹஜ் கட­மையை மேற்­கொள்­ள­மு­டி­யாமை பற்றி அறி­விப்­ப­வர்கள் மாத்­தி­ரமே அடுத்த வருடம் ஹஜ்­ஜுக்­காக இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­வார்கள் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பா­ளளர் எம்.ஆர்.எம்.மலிக் தெரி­வித்தார்.

இதே­வேளை இவ்­வ­ருடம் ஹஜ்­யாத்­தி­ரைக்­காக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு தமது பய­ணத்தை உறு­தி­செய்­வ­தற்­கான பத்­திரம் QR இலக்­கத்­துடன் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஹஜ்­யாத்­தி­ரி­கர்கள் தமது பய­ணத்தை உறு­தி­செய்து கட­வுச்­சீட்­டுடன் ஹஜ் முக­வர்­க­ளிடம் கைய­ளிக்­க­வேண்டும். ஹஜ் முக­வர்கள் ஹஜ் பய­ணி­களின் பயண உறு­திக்­கான அத்­தாட்­சிப்­பத்­தி­ரங்கள், கட­வுச்­சீட்­டுக்­களை ஹஜ் முக­வர்கள் திணைக்­க­ளத்­திடம் கைய­ளிக்­க­வேண்­டிய இறு­தித்­தினம் எதிர்­வரும் 24 ஆம் திக­தி­யாகும் என்றார்.

(Vidivelli)

LEAVE A REPLY