ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தல்; நால்வர் களத்தில்

0
189

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைத் தலைவர் பதவிக்காக நான்கு பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கமைய, திலங்க சுமத்திபால, ஜயந்த தர்மதாச, மொஹன் டி சில்வா மற்றும் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

நால்வருடைய பெயர்களும், இலங்கையிலுள்ள கிரிக்கெட் கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் ஏதேனும் அதிருப்திகள் காணப்படுமாயின் நாளைய தினத்திற்குள் முன்வைக்குமாறும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஐந்து பேர் கொண்ட தேர்தல் குழு கடந்த சனிக்கிழமை (19) நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Tamilmirror)

LEAVE A REPLY