சிவில் பாதுகாப்பு படை வீரர் சடலமாக மீட்பு

0
113

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மங்கலவெவ புலக் சீய பகுதியில் சிவில் பாதுகாப்பு படை வீரரொருவரின் சடலமொன்று நேற்று (20) மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் சேறுநுவர, காவன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த (T23849) மாரசிங்க ஆராச்சிலாகே திலகரட்ண (59வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 17ம் திகதி மங்கலவெவயிக்கு மீன் பிடிப்பதற்காகச்சென்ற வேளை வீடு திரும்பாத நிலையில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக புலொக் சீய பகுதியில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் சட்ட விசாரணை பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY