தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எனது பயணத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: அமைச்சர் மணோகணேசன் மட்டக்களப்பில் தெரிவிப்பு

0
139

(விஷேட நிருபர்)

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எனது பயணத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அரச கரும மொழிகள் அமைச்சர் மணோ கணேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று (21) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஒருவரை யொருவர் புரிந்து கொண்டு நடந்தால் இன ரீதியான பிரச்சினைகள் வராது.

நாம் சிங்ளவர் தமிழர் முஸ்லிம்களாக இருக்கலாம் ஆனால் இலங்கையர் என்ற உனர்விருக்கவேண்டும்.

முஸ்லிம் மக்கள் கண்டியிலும் திகனவிலும் அம்பாறையிலும் தாக்கப்படும் போது நாம் இலங்கையர்களா என்ற கேள்வி அவர்களுக்கு எழுத்தது. இதே போல தமிழ் மக்களுக்கும் இதே சந்தேகமும் கேள்வியும் இருக்கின்றது.

ஆனால் தமிழ் மக்களுக்கோ முஸ்லிம் மக்களுக்கோ வேறு வழிகள் கிடையாது. ஒரே நாட்டில் வாழ்ந்தே ஆகவேண்டும்.

சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற முற் போக்கு சக்திகள் சமாதான சக்திகளை நாங்கள் அடையாளம் கண்டு அவர்களுடன் கரம் கோர்க்க வேண்டும். அந்த வேலையைத்தான் நான் செய்து கொண்டிருக்கின்றேன்.

சகவாழ்வு ஒருமைப்பாட்டு அமைச்சர் என்பதற்கப்பால் சென்று நான் இந்த வேலைத்திட்டத்தினை செய்து கொண்டிருக்கின்றேன். எனது வழி சகவாழ்வு வழியாகும்.

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற வகையிலே இன பதற்றம் இனச் சிக்கல் பிரிவினையை ஏற்படுத்துவதற்கான அடிப்படைக்காரணங்கள் தோண்றக் கூடாது என விரும்புகின்றேன்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எனது பயணத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

இந்த நாடு பல்லிண பண் மொழி பல சமயங்கள் பேசப்படும் கடைப்பிடிக்கப்படும் பல இனங்கள் வாழும் நாடாகும். பண்முகத்தன்மை என்பது எமது எதிர்காலமாகும்

ஆகவே எதிர் காலத்தை சரியான முறையில் அறிந்து கொண்டு புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்கிருக்கின்றது.

ஒரே மொழி ஒரே மதம் ஒரே இனம் என்றால் இந்த நாடு துண்டு துண்டாக பிளவுபடும் இதனை நான் சொல்ல வில்லை. எனக்கு முன்னுள்ளோர் சொன்ன விடயமாகும்.அதனை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

சில முட்டாள்கள் ஒரே நாடு ஒரே மதம் ஒரே இனம் என்ற நடைமுறையை கொண்டு வரப்பார்க்கின்றார்கள். அல்லது பெரும்பான்மை மதம் பெரும்பான்மை இனம் என கொண்டு வரப்பாhக்கின்றார்கள்.

பெரும்பான்மை மக்களுக்கு கீழ் படிந்துதான் தமிழ் முஸ்லிம் கத்தோலிக்க மக்கள் நடந்து கொள்ள வேண்டுமென நினைக்கின்றார்கள். அதற்கு இடமளிக்க முடியாது.

நாட்டில் ஐக்கியம் வேண்டும் ஒற்றுமை வேண்டும். என்பதற்காக எங்களது தன்மானத்தையும் சுய மரியாதையையும் ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது.

தன்மானத்தையும் சுய மரியாதையையும் விலை பேசி விற்று விற்றுத்தான் இந்த நாட்டில் ஐக்கியம் வரவேண்டும் என்றால் அந்த ஐக்கியம் எமக்கு தேவையில்லை.

இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜையாக தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ முடியாது. அதே போனல முதல் தர பிரஜையாக இந்த நாடட்டில் சிங்கள பௌத்த மக்கள் வாழ முடியாது. எல்லோரும் சமனாக இருக்க வேண்டும்.

மொழி ரீதியாக சமத்துவமாக இருக்க வேண்டும். சமத்துவம்தான் ஐக்கியத்திற்கான முதல் நிபந்தனையாகும். ஆகவே சமத்துவமில்லாமல் கை;கிய பேசுவார்களானால் அது தொடர்பில் எனக்க உடன் பாடு கிடையாது.

தேசிய ஒருமைப்பாடு சகவாழ்வு என்ற அமைச்சை இந்த அடிப்படையில் தான் முன்னெடுக்க விரும்புகின்றேன். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சராக இருந்து வந்தேன்;. அந்த அமைச்சை நான் நடாத்திய விதம் குறித்து ஜனாதிபதி திருப்தியடைந்தன் காரணமாகத்தான் ஜனாதிபதி தனக்கு கீழே இருந்த தேசிய ஒருமைப்பாடு அமைச்சையும் என்னிடம் தந்துள்ளார். அதையும் சேர்த்துக் கொண்டு கடந்த கால வளங்களையும் இணைத்துக் கொண்டு இரண்டாம் கட்ட பயணத்தை ஆரம்பித்துள்ளேன். அந்த பயணம் என்பது நாட்டில் ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரும் என நினைக்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

29 நடமாடும் சேவைகளை நடாத்தியுள்ளோம். அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு நடமாடும் சேவைகளை நடாத்தியுள்ளோம். இந்த நடமாடும் சேவைகளில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு பல் வேறு தீர்வுகளை வழங்கியுள்ளோம்.

பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு பிறப்பு சான்றிதழ், தேசிய அடையாள அட்டை போன்றவற்றை பெறக் கூடிய வாய்ப்பையும் வசதியையும் இந்த நடமாடும் சேவைகள் மூலம் ஏற்படுத்தியுள்ளோம்.

கடந்த காலங்களில் மக்கள் தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக அரசாங்க காரியாலயத்திற்கு ஏறி இறங்கிளார்கள். அதை மாற்றி மக்களை நாடி நாங்கள் வருகின்றோம் என மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY