நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

0
339

மட்டக்களப்பு, மண்டூர் மூங்கில் ஆற்றில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவம் நேற்று (20) பகல் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

மண்டூர் கனேசபுரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய உமாபதி கிசான் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன் நேற்று பகல் 12 மணியளவில் வீட்டில் இருந்து 6 நண்பர்களுடன் மூங்கில் ஆற்றில் நீராடச் சென்று நீராடி விளையாடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளான்.

இதனையடுத்து உடனடியாக குறித்த சிறுவனின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் தேடியபோது ஆற்றில் உள்ள மூங்கில் மரத்துக்குள் சிக்குண்ட நிலையல் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இதனையடுத்து சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Adaderana)

LEAVE A REPLY