பொலிஸாரை தாக்கியதுடன் கடமைக்கு இடையூறு விளைவித்த ஐந்து பேருக்கும் விளக்கமறியல்

0
295

(அப்துல்சலாம் யாசீம்)

பொலிஸாரை தாக்கியதுடன், அவர்களது கடமையை செய்யவிடாமல் இடையூறு விளைவித்த மூன்று பெண்கள் உட்பட இரண்டு ஆண்களையும் எதிர்வரும் 22ம் திகதி செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (20) திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ரொட்டவெவ பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சோதனையிட சென்ற போதே பொலிஸாரை தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY