துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி

0
530

ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலயத்தின் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (18) நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர், ஹொரவ்பொத்தான வைத்தியசாலையிஸ் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 32 வயதான திவுல்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் ஆகும்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

ஹொரவ்பொத்தான நிரூபர்,
முஹம்மட் ஹாசில்.

LEAVE A REPLY