ஓட்டமாவடியில் சகல வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையம் விரைவில் …

0
355

(வாழைச்சேனை நிருபர்)

”ஓட்டமாவடியில் சகல வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையத்தை ஒரிரு மாதங்களில் திறக்க இருக்கின்றோம்“ என கடற்தொழில் நீரிய வளத்துறை மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வும், ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டரங்கு புனர்நிர்மாண ஆரம்ப நிகழ்வும் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டரங்களில் கடந்த புதன்கிழமை (16) மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் கல்குடாப் பிரதேசத்திலுள்ள இளைஞர்களை ஒருமுகப்படுத்தி புதிய வேலைத் திட்டங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். கல்குடாப் பிரதேசத்திலுள்ள இளைஞர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், நல்வழிப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டிய தேவைப்பாடும் எங்களுக்கு இருக்கின்றது.

அந்தவகையில் இளைஞர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்துவதும், கல்வியில் மேம்பட வைப்பதும், உடற்பயிற்சியில் அதிகம் ஈடுபடுகின்றவர்களாக மாற்ற வேண்டும் என்கின்ற விடயமும், பயிற்சிகளை வழங்குகின்ற வேலைத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றோம்.

ஓட்டமாவடி நூலகத்தின் மேல் தளத்தில் மிக விரைவில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரின் வேண்டுகோளின் அடிப்படையில் சகல வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையத்தை ஒரிரு மாதங்களில் திறக்க இருக்கின்றோம். இதற்காக எனது அமைச்சின் மூலம் இரண்டு மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளேன்.

இதனை முதல் கட்டமாக ஆரம்பித்து இரண்டாம், மூன்றாம் கட்டமாக எல்லா பிரதேசங்களுக்கும் கொண்டு செல்வதும், அதனுடைய பகுதிகளை எதிர்காலத்தில் விரிவுபடுத்தி மற்யை பிரதேசங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எதிபார்ப்புடன் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.தமீம், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர் எம்.றுவைத், பிரதி தவிசாளர் யூ.எல்.அஹமட் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கிராமிய பொருளாதார அமைச்சின் பத்து இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இருபத்தொரு விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணமும், கடற்தொழில் நீரிய வளத்துறை மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வேண்டுகோளின் அடிப்படையில் விளையாட்டுதுறை அமைச்சினால் முதல்கட்டமாக பத்து இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டரங்கு புனர்நிர்மாண வேலைகள் இடம்பெறுகின்றது.

01 (2) 01 (3) 01 (5) 01 (6) 01 (7) 01 (8) 01 (10) 01 (12) 01 (13)

LEAVE A REPLY